Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் புதிய புரிந்துணர்வு செயற்திட்டமொன்றை உருவாக்கி அதன் கீழ் தொடர்ந்தும் இயங்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வதில் உள்ள நெருக்கடிகள், அடுத்த கட்டச் செயற்பாடுகள் குறித்து ஆராயும் முக்கிய கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய கூட்டத்தில் ஈபிஆர்எல்ஃஎவ் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், க.சர்வேஸ்வரன், துரைரட்ணசிங்கம் ஆகியோரும் தமிழரசுக் கட்சி சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதன், ஹென்றி மகேந்திரன், சிறிகாந்தா ஆகியோரும் புளொட் சார்பில் ஆர்.ராகவனும் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பு குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து இயங்கும். புதிய புரிந்துணர்வு செயற்றிட்டம் ஒன்றை உருவாக்கி அதனடிப்படையில் நான்கு கட்சிகளும் செயற்படுவது என்றும், கட்சியை பதிவு செய்வது குறித்தும், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும், புதிய செயற்றிட்டத்தை உருவாக்குவது குறித்தும் எதிர்வரும் 07ஆம் திகதி மீண்டும் கூடி ஆராய்வதென்றும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.” என்றுள்ளார்.

0 Responses to கூட்டமைப்பு புதிய புரிந்துணர்வு திட்டமொன்றை உருவாக்கி செயற்படும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com