நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த மனுவை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று எடுத்துக்கொள்ள உள்ளது.
ஒடிசாவில் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு முறைகேடாக நிலக்கரி சுரங்கம் ஏலம் விடப்பட்டத்தில் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டாதாகக் கூறி, சிபிஐ தற்போது பல வழக்குகளை இதுத் தொடர்பாக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் மன்மோகன் சிங்கும் பெயரும் சேர்க்கப்பட்டு உள்ளதால், அவர் வருகிற 8ம், திகதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது.
இதை எதிர்த்து மன்மோகன் சிங் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.மன்மோகன் சார்பாக காங்கிரசின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கபில்சிபல் ஆஜராவார் என்று தகவல் தெரிய வருகிறது.

0 Responses to முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதான வழங்கு விசாரனை உச்ச நீதிமன்றத்தில் இன்று!