இன்று திங்கட்கிழமை ஆப்கானிஸ்தானின் கிழக்கு லோகர் மாகாணத்தில் அமைந்துள்ள அந்நாட்டு தேசிய இராணுவத்தின் பாசறை மீது அமெரிக்க வான் படையின் விமானங்கள் தவறுதலாகத் தாக்குதல் நடத்தியதில் 8 துருப்புக்கள் பலியானதாகவும் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வான் தாக்குதல் திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்றதாக போலிஸ் பிரதான அதிகாரி மொஹம்மட் தாவுத் அஹ்மடி தெரிவித்துள்ளார்.
மேலும் ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் அமெரிக்கப் படைகளின் கமாண்டரான ஜெனரல் ஜோன் கம்பெல் விடுத்த அறிக்கையில் பலியான இராணுவத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் இதனால் பாதிக்கப் பட்ட அவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கையில் கொல்லப் பட்ட ஆப்கான் துருப்புக்களின் எண்ணிக்கை 6 என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. இதேவேளை ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் பிரதித் தகவல் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் வில்சன் ஷொஃப்னர் இச்சம்பவம் குறித்துத் தகவல் அளிக்கையில் இந்த அனர்த்தம் தொடர்பில் வெளிப்படைவயான அதே நேரம் விரைவான விசாரணை முன்னெடுக்கப் படும் என்றும் மேலதிக விபரங்கள் அதன் பின் தெரிவிக்கப் படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொரு சாதாரண அதிகாரி கூறுகையில் இரு ஹெலிகாப்டர்கள் ஆப்கான் இராணுவப் பாசறை மீது இரு பக்கங்களிலும் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். மேலும் லோகர் மாகாணத்தின் பரக்கி பரக் மாவட்ட தலைமை அதிகாரி மொஹம்மட் ரமின் அமின் அளித்த தகவலில் சர்வதேசப் படைகள் உரிய அதிகாரத்துடன் செயற்பட்டு வந்த குறித்த இராணுவப் பாசறை மீது ஏன் தாக்குதல் நடத்தின என்று தனக்குப் புரியவில்லை எனவும் குறித்த பாசறையின் மேலே ஆப்கான் அரசின் பெரிய தேசியக் கொடி கூட பறந்து கொண்டிருந்ததாகவும் கூட ஐயம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்க விமானத் தாக்குதலில் தவறுதலாக 8 ஆப்கானிஸ்தான் துருப்புக்கள் பலி!