Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சக்தி தொலைக்காட்சியில் ஜெ.ஸ்ரீரங்கா நடத்தும் ‘மின்னல்’ எனும் அரசியல் விவாத நிகழ்ச்சிக்கு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று திங்கட்கிழமை தடை விதித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணியின் செயலாளருமான ஜெ.ஸ்ரீரங்கா, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றார். எனவே, அரசியல் விவாத நிகழ்ச்சியை அவர் நடத்துவது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டது.

குறித்த முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்டே தேர்தல்கள் ஆணையாளர் பொதுத் தேர்தல் காலத்தில் மின்னல் நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளார்.

0 Responses to ஜெ.ஸ்ரீரங்கா நடத்தும் ‘மின்னல்’ அரசியல் விவாத நிகழ்ச்சிக்கு தடை!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com