தமிழ் மக்களின் தேசத்தினை அங்கீகரிப்பதுதான் இனப்பிரச்சினைக்கான ஒரே தீர்வாக அமைய முடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
“இனப்பிரச்சினை தமிழ்த்தேசம் அழிக்கப்படுவதனால் ஏற்பட்ட பிரச்சினை. தமிழ்த் தேசத்தை தாங்கும் தூண்களான நிலம், மொழி, பொருளாதார, கலாசாரம் என்பன திட்டமிட்டு அழிக்கப்படுவதனால் ஏற்பட்ட பிரச்சனை. இதுவரை கால இன விடுதலை போராட்டம் தமிழ்தேசத்தை அழிப்பவனுக்கும் அவ்ழிப்பில் இருந்து தேசத்தை பாதுகாக்க முயல்பவர்களுக்கும் இடையிலான போரட்டமே. எனவே தேசத்தை அங்கீகரிப்பதுதான் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அமைய வேண்டும்“ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமராட்சிக்கிழக்கு குடத்தனையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “இந்தியாவும் மேற்குலகும் 13வது அரசியல் யாப்பு திருத்தத்தை அரசியல் தீர்வாக திணிக்க முயற்சிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதற்கேற்ப தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற தமிழ் மக்களின் அடிப்படை கோட்பாட்டையும் கைவிட்டுள்ளனர். இந்த செயற்பாடு தமிழ்த் தேசிய அரசியலை செங்குத்தாக கீழ் இறக்குகின்றது.
13வது திருத்தமும் அதன் அடிப்படையிலான மாகாண சபை முறையும் எந்த வகையிலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்க்கப் போவதில்லை. வரதரஜபெருமாளின் வட-கிழக்கு மாகண சபையும், பிள்ளையானின் கிழக்கு மாகாண சபையும், சி.வி.விக்னேஸ்வரனின் வடக்கு மாகாண சபையும் அதனை தெளிவாக நிரூபித்துள்ளன.
வரதராஜ பெருமாள் மாகாண சபை முறையில் எந்தவித பயனும் இல்லை என கூறி ஈழப் பிரகடனம் செய்தார். பிள்ளையான் ஒரு பியோனை நியமிக்கும் அதிகாரம் கூட தனக்கு இருந்திருக்கவில்லை என்றார். சி.வி.விக்னேஸ்வரனின் ஓலம் ஆளுநரை மாற்றிய பின்னரும் கூட குறையவில்லை. இவ்வளவு அனுபவத்தின் பின்னரும் கூட மாகாண சபை முறையை அரசியல் தீர்வாக ஏற்றுக் கொண்டால், அவர்களை துரோகிகளாகவே கருதவேண்டும். இந்த தேர்தலில் மக்கள் அவர்களை இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதுதான் ஒரே தீர்வு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்