Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.எஸ் தீவிரவாத குழுவில் இணைந்திருந்த இலங்கையர் ஒருவர், தாக்குதல் ஒன்றில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.எஸ் தீவிரவாதக்குழுவில் இணைந்த நிலையில் பலியான முதலாவது இலங்கையர் என்று கருதப்படுகிறது.

கண்டி, கலேவலையை சேர்ந்த கரேத்தே பயிற்றுனர் ஒருவரே பலியானவராவார்.

அபு சுராய் சைலானி என்ற புனைப்பெயரை கொண்டவரே, சிரியாவில் மேற்கத்தைய விமானத்தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக சமூக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர், மூன்று வருடங்களுக்கு முன்னர் மஹரகமையில் கரேத்தே வகுப்புக்களை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் மரணத்தை ஐஎஸ் அமைப்பின் முகநூலில் சிரியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சு, கலேவலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் குறித்து புதிய தகவல்

ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் கலேவெல பிரதேச சர்வதேச பாடசாலை அதிபராக இரண்டு வருட காலமாக செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் சிரியாவில் மேற்கத்தைய விமானத் தாக்குதல் ஒன்றில் கடந்த வாரம் கொல்லப்பட்டதாக சமூக இணையத்தள செய்திகள் வெளியாகியது.

ஐ.எஸ் திவிரவாத குழு அபு சுராய் சைலானி என்ற புனைப்பெயரை அவருக்கு சூட்டியிருந்தது. 37 வயதுடைய இவர் கண்டி, வெரெல்லகம பிரதேசத்தில் பிறந்தவராகும்.

அவரது மனைவி கொழும்பை சேர்ந்தவராகும்.

கலேவெல பிரதேச சர்வதேச பாடசாலையில் அதிபராக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் இவர் முஸ்லி லிலம்தன் என்ற பெரை பயன்படுத்தியுள்ளார்.

2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாடசாலை விடுமுறையின் போது பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னார் மெக்கா யாத்திரைக்கு செல்வதாக கூறி பாடசாலை அதிபர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக பாடசாலை இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் முதல் இலங்கையர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com