Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் நீடித்தால் நாட்டில் எலும்புக் கூடுகள் மாத்திரமே மிச்சமிருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல, தலங்கமையில் அமைந்துள்ள சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் அகில இலங்கை விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி அதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாவது, “என்னுடைய நிர்வாகத்தை பிடுங்கி எடுத்த ஏழு மாதங்களுக்குள் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. மக்கள் வாழமுடியாத அளவுக்கு நிலைமை மாற்றியமைக்கப்பட்டு விட்டது. அவ்வாறான ஆட்சி நீடித்திருந்தால் நாட்டில் எலும்பு கூடுகள் மட்டுமே மிஞ்சியிருக்கும்” என்றுள்ளார்.

0 Responses to நல்லாட்சி அரசாங்கம் நீடித்தால் எலும்புக்கூடுகள் மாத்திரமே மிஞ்சும்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com