Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் நிராகரிக்கப்பட்ட கருணா, ஐக்கிய தேசிய கட்சியிடம் சரணடையவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமக்கு கிடைக்க வேண்டிய தேசிய பட்டியல் ஆசனத்தை, சுசில் பிரேமஜெயந்தவும், பசில் ராஜபக்ஷவுமே தட்டிக் கழித்ததாக அவர் கூறியுள்ளார்.

 னினும் தாம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்றவிருப்பதாகவும், இது தொடர்பில் தாம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் கூறினார்.


அதேநேரம், பிரதமர் ரணிலுக்கும் தமக்கு சிறந்த உறவு இருப்பதாகவும், இந்த நிலையில் தாம் அவருடன் இணைந்தும் பணியாற்ற முயற்சிப்பதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.

எவ்வாறான சூழ்நிலையிலும் தாம் அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஐக்கிய தேசிய கட்சியிடம் சரணடையவுள்ள கருணா!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com