இந்தியாவின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்த உரையின் போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் (OROP) குறித்து மீண்டும் உறுதியான முடிவேதும் சொல்லாது தவிர்த்துக் கொண்டார் மோடி. மாறாக "20 ஆண்டுகளாக இந்த திட்டம் நிலுவையில் உள்ளது. ஒரே பதவி ஒரே ஓய்வுதியம் திட்டம் அனைத்து அரசுகளாலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு எந்த தீர்வும் காணப்படவில்லை. என்னாலும் இதை தீர்க்க முடியவில்லை. ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். கொள்கை அடிப்படையில் இந்த திட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கான இறுதி நிலையில் நாங்கள் உள்ளோம். விரைவில் தகுதி அடிப்படையில் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் வழங்கப்படும்" என்றார்.
எனினும், தனது உரையில் மோடி இத்திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்காததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் ஜந்தர் மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் முன்னாள் இராணுவத்தினர்.
மோடி மேலும் தனது உரையில் "இந்தியா என்பது ஒரு அணி. 125 கோடி மக்கள் கொண்ட அணி. இந்த மண்ணில் ஜாதிய வாதத்திற்கும், மதவாதத்திற்கும் இடமில்லை. இந்தக் காலை உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் உடையது. கலாச்சார வேற்றுமைகளை கலைந்திடுவோம். இந்தியா ஒருஙிணைந்தது. இந்த நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வோம். மத்திய அரசின் ஜன்தன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 17 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ20 ஆயிரம் கோடி நிதி வைப்பில் இடப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் 4.25 இலட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
எல்.பி.ஜி மானியம் என்ற பெயரில் ஆண்டு தோறும் வீணான 15 ஆயிரம் கோடி தடுக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் பேர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். Start-up-India, Stan up India எனும் புதிய வங்கி நிதி வைப்புத் திட்டத்தையும் தற்போது தொடங்கியுள்ளோம். இளைஞர்களிடையே வங்கியில் நிதி வைப்பு குறித்து ஊக்குவிப்பதே இதன் நோக்கம்.
எமது அனைத்து திட்டங்களிலும் மக்கள் பங்களிப்பே எமக்கு முக்கியம். இது மக்களின் அரசு என்றார்.
மோடியின் முழுமையான உரை, வீடியோ வடிவில் மோடியின் யூடியூப் இணையத் தளத்திலிருந்து!

0 Responses to இந்தியா என்பது 125 கோடிபேர் கொண்ட ஒரு அணி!: சுதந்திர தின உரையில் மோடி!