நேற்று முன் தினம் வியாழக்கிழமை பிரேசிலின் மிகப் பெரிய நகரான சாவோ பாலோவிலுள்ள உணவு விடுதிக்குள்ளும் , ஐஸ்கிறீம் கடை மற்றுமோர் பிரதேசத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்களது கண் மூடித் தனமான துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் கொல்லப் பட்டது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகவலை அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. தற்போது இந்த அசம்பாவிதம் குறித்துப் பல்வேறு கோணங்களிலும் துரித விசாரணை முடுக்கி விடப் பட்டிருப்பதாக சாவோ பாலோ மாநிலப் பாதுகாப்புத் திணைக்களம் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளது. மே மாதம் ஓர் உதைப் பந்தாட்ட மைதானத்தில் பார்வையாளர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 8 பேர் கொல்லப் பட்டதை அடுத்து இரு போலிஸ் அதிகாரிகள் கைது செய்யப் பட்டிருந்தனர். இந்நிலையில் சில குற்றவியல் நிபுணர்கள் கருத்துப் படி வியாழக்கிழமை நடந்த தாக்குதல்கள் இதற்குப் பழி வாங்கும் செயலாக இருக்கலாம் எனவும் ஊகிக்கப் படுகின்றது.

0 Responses to பிரேசிலின் மிகப் பெரிய நகரான சாவோ பாலோவில் துப்பாக்கிச் சூடு!:19 பேர் பலி