Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

1985 ஆவணி 18ல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சி முகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கி வைக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர்.

மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண் புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது.

அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.

இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்ட போது பெண் புலிகளின் முதலாவது உயிர்ப்பலி நிகழ்ந்தது.கோப்பாய்க்கும் நாவற்குழிக்குமிடையில் நடந்த சண்டையில் லெப்.மாலதி வீரச்சாவடைந்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான பெண் புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் பிரிவு விடுதலைப் புலிகளின் சகல வேலைத் திட்டங்களிலும் படையணிகளிலும் பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.

கடல் மற்றும் தரைக் கரும்புலிகளாகவும் பெண் புலிகள் பலர் வீரச்சாவடைந்துள்ளனர்.

0 Responses to விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 30 ஆண்டுகள் பூர்த்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com