இஸ்ரேல் சிறையில் ஜூன் 16 ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் பாலஸ்தீனக் கைதியான 31 வயதுடைய மொஹம்மட் அல்லனுக்கு அவரது குடும்பத்தினர் சம்மதத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை கட்டாயத்தின் அடிப்படையில் நீராகாரம் வழங்கப் பட்டதைத் தொடர்ந்து அவர் நினைவு திரும்பியுள்ளார்.
மேலும் இன்று புதன்கிழமை இஸ்ரேலின் சுப்ரீம் நீதிமன்றம் அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு விடுவிக்கப் பட்ட வலியுறுத்தல் தொடர்பாகக் கவனம் செலுத்தவும் உள்ளது.
நிர்வாகத் தண்டனைப் பிரிவில் எவ்விதத் தண்டனையோ அல்லது விசாரணையோ இன்றி இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள 300 இற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் மற்றும் சில இஸ்ரேலியர்களுடன் சேர்த்தே மொஹம்மட் அல்லனும் அடைக்கப் பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மொஹம்மட் அல்லன் சிறை வைக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டுள்ள இஸ்ரேலின் பார்ஷிலாய் மருத்துவ மையத்தில் அவர் துன்புறுவதைக் கேள்விப் பட்ட அவரின் ஆதரவாளர்கள் ஜஃபா ஜெருசலேம் இலிருந்து பஸ் வண்டிகள் மூலம் வந்து சேர்ந்தனர். மேலும் ஜூலை மாதம் இஸ்ரேலில் அனுமதிக்கப் பட்ட சட்டத்தின் அடிப்படையில் அல்லன் தொடர்ந்தும் உண்ணாவிரதம் இருக்க முயற்சித்தால் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் அவருக்குக் கட்டாயத்தின் அடிப்படையில் உணவு அளிக்கப் படலாம் எனவும் தெரிய வருகின்றது.
பாலஸ்தீன ஆயுதக் குழு உறுப்பினரும் இஸ்லாமிய ஜிஹாதிப் போராளியுமான மொஹம்மட் அல்லன் போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காகக் கைது செய்யப் பட்டு 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 30 மாதங்களுக்கு சிறை வாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக கோமா நிலைக்குச் சென்றிருந்த அல்லன் சுகாதாரக் காரணங்களுக்காக உடனே விடுவிக்கப் பட வேண்டும் என வலுவான கோரிக்கை எழுந்தது. கடந்த சில வருடங்களாகப் பாலஸ்தீனப் போராளிகள் சிலர் மேற்கொண்டு வந்த உண்ணா விரதப் போராட்டங்கள் ஓரளவு வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மொஹம்மட் அல்லனுக்குக் கட்டாய உணவு அளிக்க வேண்டுமெனில் அவர் சுயநினைவுடன் உள்ள போதே அவரது வாயினூடாக குழாய் ஒன்றைச் செலுத்தி அதன் மூலம் வயிற்றுக்கு உணவைச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இஸ்ரேல் சிறையில் உண்ணாவிரதமிருந்த பாலஸ்தீனக் கைதி நினைவு திரும்பினார்