Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பில் பேரில் 80 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க, குறித்த விடயம் தொடர்பில் முடிந்தால் மஹிந்த ராஜபக்ஷவை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சவால் விடுத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையில் 2006ஆம் ஆண்டு ராடா நிறுவனத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 80 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படும் முறைப்பாடு உண்மையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பட்டாலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

போலி நிறுவனங்கள் மூன்றை உள்ளடக்கிய ராடா நிறுவனத்தின் பிரதானிகளான டிரான் அலஸ் மற்றும் எமில் காந்தன் ஆகியோரை பயன்படுத்தி மேற்கொண்ட பரிவர்த்தனைகள் தற்போது வெளிவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கிய விவகாரம்; மஹிந்தவை பகிரங்க விவாதத்துக்கு சம்பிக்க அழைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com