இலங்கைப் பாராளுமன்றத்துக்கான 15வது பொதுத் தேர்தல் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய மக்கள் முன்னணியை ஆட்சியில் அமர்த்துவதற்கான முடிவினை வழங்கியிருக்கின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவி தொடர்பிலான ஆர்வத்தோடு களமிறங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக முன்னிறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒப்பீட்டளவில் தோல்வி கண்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான 150 நாட்களைக் கடந்த தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் ஐக்கிய தேசியக் கட்சியை (நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி) மீண்டும் ஆட்சியதிகாரம் நோக்கி நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான இன சமநிலையையும்- சமூக அமைப்புக்களின் உள்வாங்கல்களையும் அந்தக் கட்சி மேற்கொண்டிருந்தது. அது, வெற்றியில் பிரதி பலிக்கின்றது. 113 ஆசனங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை அரசாங்கமொன்றை அமைப்பதற்கான வாய்ப்புக்களை ஐக்கிய தேசியக் கட்சியினால் பெற்றுக் கொள்ள முடியாத போதிலும், தேசிய அரசாங்கமொன்றினை தலைமையேற்று நடத்துவதற்கான முழுமையான ஆளுகையை ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாகியிருக்கின்றது.
இது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தரப்பினருக்கு, எதிர்க்கட்சி வரிசையில் நிறுத்துவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன்போக்கில், எதிர்க்கட்சித் தலைவராக யார் செயற்படுவார் என்கிற கேள்வி எழுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ சாதாரண பாராளுமன்ற உறுப்பினரான பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஏற்கனவே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் செயற்குழு உறுப்பினர் பதவிகளைப் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பறித்துள்ளார். இது, மஹிந்த ராஜபக்ஷ தரப்பினை மூன்றாம் நிலைக்கு தள்ளும். அது, அவர்களை அரசியலிலிருந்து அகற்றுவதற்கான வாய்ப்புக்களை சிலவேளை உருவாக்கலாம்.
வடக்கு- கிழக்கில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தம்முடைய ஏக பிரதிநிதிகள் எனும் நிலைப்பாட்டினை உருவாக்கும் அளவுக்கான ஆணையை வழங்கியிருக்கின்றார்கள். தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும் அழுத்தங்களை வழங்கும் தரப்பாக தன்னை முன்னிறுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தமிழ் மக்கள் கிட்டத்தட்ட முற்றாக நிராகரித்துவிட்டார்கள் என்று கொள்ளும் அளவுக்கான நிலை உருவாகியிருக்கின்றது. யாழ் தேர்தல் மாவட்டத்தில் 15000 வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால், வடக்கு- கிழக்கில் மொத்தமாக 18000 வாக்குகளை மாத்திரமே பெற முடிந்திருக்கின்றது. அவ்வாறான நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னுடைய அரசியல் தொடர்பிலான எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் நிறைய கள ஆய்வுகளைச் செய்ய வேண்டியிருக்கும். கொள்கை- கோட்பாடு ரீதியிலான அரசியலில் மக்களை வெற்றி கொள்வதற்கான முனைப்புக்கள் தொடர்பில் யதார்த்த களத்தினைப் புரிந்து செயலாற்ற வேண்டும். அது, தமிழ்த் தேசிய அரசியலுக்குள் அவசியமான ஒன்றாகவும் கொள்ளப்படுகின்றது.
இம்முறை ஆட்சியமைக்கப் போகும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வகையான உறவினைக் கொண்டிருக்கப் போகின்றது. அரசியல் பிரச்சினைகள், அரசியற்கைதிகளின் விடுதலை, இறுதி மோதல்களில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பிலான சர்வதேச விசாரணை கையாள்கை, காணி விடுவிப்பு உள்ளிட்ட பிரதான விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக சாதுரியமாக கையாள வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. கடந்த காலங்கள் போன்று சாக்கு போக்குகளை தொடர்ந்தும் சொல்லிக் கொண்டிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய தன்மைகளை ஏற்படுத்தது. அது, மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றங்களின் பக்கம் இழுத்துச் செல்லும் நடவடிக்கையாக பார்க்கப்படும். அத்தோடு, ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு- கிழக்கின் உள்ளக அபிவிருத்தி தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பான செயற்திட்டங்களோடு பணியாற்ற வேண்டும். அதுவும், அவசரமானது.
வடக்கு கிழக்கிற்கு வெளியே தமிழ்ப் பிரதிநிதித்துவம் இம்முறை குறிப்பிட்டளவு பாதுகாக்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தியும் கவனிக்கத்தக்கது. நுவரெலியா, கண்டி, பதுளை, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் காக்கப்பட்டிருக்கின்றது. இது, சிங்களப் பெரும்பான்மையுள்ள பாராளுமன்றத்துக்குள் சிறுபான்மையினங்களின் ஆளுகையை அதிகரிப்பதற்கு உதவும். அந்த வகையில் மலையக வாழ் தமிழ் மக்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துவதற்கான திட்டங்களை தமிழ் பிரதிநிதிகள் ஆற்ற வேண்டும். அமைச்சுப் பதவிகளை வகிப்பது என்பது சமூகத்துக்கான திறமையான திட்டங்களோடு அமைய வேண்டும். அது, நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மலையக மக்களின் பெரும் எதிர்பார்ப்பு.
கட்சிகள் நேரடி வாக்களிப்பில் பெற்ற ஆசனங்கள் (196)
ஐ.தே.க 93
ஐ.ம.சு.கூ 83
த.தே.கூ 14
ஜே.வி.பி 04
மு.கா 01 (மட்டக்களப்பில் தனித்து போட்டியிட்டது)
ஈபிடிபி 01
மொத்தமுள்ள 29 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதங்களின் போக்கில் பகிரப்படும். இதன்போக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2 ஆசனங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. எனினும், ஒரு ஆசனம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதன்போக்கில் இம்முறை பாராளுமன்றத்துக்குள் 3வது பெரும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 15 அல்லது 16 ஆசனங்களோடு வகிக்கப்போகின்றது. (மஹிந்த தரப்பு ஐ.ம.சு.கூ.விலிருந்து பிரிந்து மூன்றாவது அணி அமைத்தால் சிவவேளை த.தே.கூ 4வது இடத்துக்கு தள்ளப்படலாம்).
மோதல்கள் முடிவுக்கு வந்ததன் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில் அச்சுறுத்தல்களைத் தாண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் முதன்மை சக்தியாக நிறுத்தியிருக்கின்றார்கள். இந்தப் பொதுத் தேர்தல் முடிவுகளும் அதனையே பிரதிபலித்திருக்கின்றன. இந்த ஆணையை வெற்றிகரமாக மாற்றிக்காட்ட வேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும்- அதன் தலைவர்களுக்கும் உண்டு. அதுதான், தமிழ் தேசிய அரசியலின் நீட்சிக்கும் அவசியமானது!
4tamilmedia

0 Responses to பொதுத் தேர்தல் 2015 – மக்களின் ஆணை!