இலங்கையின் தேர்தல் வரலாற்றில் அதிக வேட்பாளர்கள் மற்றும் அதிக வாக்காளர்கள் பங்கெடுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய பொதுத் தேர்தலை அமைதியாகவும், சுயாதீனமாகவும் நடத்துவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென ஆறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.
வாக்கெண்ணும் பணிகளின் போது குழறுபடிகள் ஏற்படும் என்று எவரும் ஐயம் கொள்ளத் தேவையில்லை. சுயாதீனமாக சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தேர்தல்கள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
கடந்த காலத் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தேர்தல் வன்முறைகள் மற்றும் விதிமீறல் சம்பவங்கள் குறைவாக இடம்பெற்ற தேர்தலாக இம்முறை தேர்தல் பார்க்கப்படும் நிலையில், தேர்தல் தினமான இன்றையதினமும் இந்த அமைதி நிலையைப் பேணுவதற்கு தேர்தல்கள் திணைக்களம் மற்றும் பொலிஸார் பூரண நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை ஆரம்பிக்கும் வாக்களிப்பு செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னரான வாக்கெண்ணும் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கென 31 ஆயிரத்துக்கும் அதிகமான உள்ளூர் மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
பவ்ரல் அமைப்பின் சார்பில் 14000 பேரும், கபே அமைப்பின் சார்பில் 8700 பேரும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் சார்பில் 6700 பேரும், தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் சார்பில் 1000ற்கும் அதிகமானவர்கள் உள்ளடங் கலாக சுமார் 31000 உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனைவிட ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு, ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் சீ.எம்.ஈ.வி அமைப்பின் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் உள்ளடங்கலாக 130ற்கும் அதிகமானவர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்களிப்பது சகலரதும் கடமை என்பதால் நேரகாலத்துக்குச் சென்று வாக்களித்துவிட்டு பொது இடங்களில் கூடிநிற்காமல் விலகிச் செல்லுமாறு கண்காணிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களான கபே, பவ்ரல், ட்ரான்ஸ் பெரன்சி இன்டர்நஷனல், சி.எம்.ஈ.வி, தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம், சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான இயக்கம் ஆகியன இணைந்து நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியிருந்தன.
இலங்கை தேர்தல் வரலாற்றில் அதி கூடுதலான சர்வதேச கண்காணிப்பாளர் கள் பங்கெடுக்கும் தேர்தலாக இம்முறை தேர்தல் அமைந்துள்ளது. தேர்தல் சட் டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் திணைக்களத்தாலும் நட வடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், வாக்கெண்ணும் பணிகளின் போது குழறுபடிகள் ஏற்படலாம் என எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லையென பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த வன்முறைகளைக் கொண்ட, குறுகிய காலத்துக்குள் நடத்தப்படும் தேர்தலாக இன்றைய தேர்தல் அமைந்துள்ளது. 4 கொலைச் சம்பவங்களைத் தவிர பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இம்முறை தேர்தலில் இடம்பெறவில்லை யென நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கூறினார்.
இம்முறை தேர்தலில் ஜனாதிபதி நேரடியாக தொடர்புபடாதமையால் தேர்தல் பிரசாரங்களில் அரசவளப் பயன்பாடு குறைந்துள்ளது. கடந்த காலங்களில் உயர்மட்டத்திலிருந்தவர்களின் அனுசரணையுடனேயே அரசவளங்கள் தேர்தல்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. எனினும், இம்முறை இதனைக் குறைக்க முடிந்துள்ளது.
தேர்தல் பிரசாரங்கள் முடிவடைந்த பின்னர் கடந்த சனிக்கிழமை மத வழிபாடுகள் என்ற பெயரில் மக்களுக்கு பொருட்கள் வழங்கிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக குருநாகல் மாவட்ட வேட்பாளர்களாக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோருக்கு எதிராகவும் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. குருநாகல், வவுனியா, கம்பஹா, புத்தளம் உள்ளிட்ட பல இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இது மாத்திரமன்றி புத்தளம், பதுளை, நுவரெலியா, மாத்தளை மாவட்டத்தின் லக்கலை ஆகிய இடங்களில் மதுபானம் வழங்கப்பட்டதாகவும், இரண்டு பிரதான கட்சிகளால் இவை வழங்கப்பட்டிருப் பதாகவும் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக கீர்த்தி தென்னக்கோன் மேலும் தெரிவித்தார்.
இது இவ்விதமிருக்க இம்முறை தேர்தலில் அரசவளப் பயன்பாடு மிகவும் குறைந்துள்ளது. இருந்தபோதும் இது திருப்தி தரும் வகையில் அமையவில்லையென டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நஷனல் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஷான் விஜயதுங்க கூறினார். அரசாங்க வாகனங்கள் மற்றும் அரச ஊழியர்கள் தேர்தல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இருந்தபோதும் ஒட்டுமொத்தமாக இம்முறை பொதுத் தேர்தலை கடந்த காலங்களைவிட மிகவும் அமைதியாகவும், நீதியான முறையிலும் நடத்துவதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஒன்றிணைந்து தெரிவித்தனர். இவ்வாறான நிலையில் வாக்காளர்கள் பொருத்தமான நபர்களைத் தெரிவு செய்வதுடன், தமக்குள்ள வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்து மாறும் கேட்டுக்கொண்டனர்.
தேர்தல் முடிவடைந்த பின்னர் வெற்றிபெற்றவர்களின் கொண்டாட்டங்கள் மற்றையவர்களைப் பாதிக்காத வகையில் அமையவேண்டும் என்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கோரியுள்ளனர்.

0 Responses to அமைதியான தேர்தலுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் வேண்டுகோள்!