Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படக் கூடிய பிரதமர் ஒருவரையே எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

பலாங்கொடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்வொரு வழியிலேனும் பிரதமராகினால் பாராளுமன்றம் மாத்திரமின்றி முழு நாடும் குழப்பமடையும்.

நான் தேர்தலில் தோல்வியடைந்து வீட்டிற்கு செல்லவில்லை. எனினும், தோல்வியடைந்து சென்ற மஹிந்த ராஜபக்ஷ பதவி பேராசையில் மீண்டும் போட்டியிடுகின்றார். அவரை தோற்கடிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரியுடன் இணைந்து செயற்படக் கூடிய பிரதமரை தெரிவு செய்ய வேண்டும்: சந்திரிக்கா குமாரதுங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com