நாடாளுமன்ற தேர்தலில் எவரிற்கும் ஆதரவளிக்காது நடுநிலை வகிப்பது முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்பமென கூட்டமைப்பின் வேட்பாளர்களுள் ஒருவரான சுமந்திரன் தெரிவித்துள்ள போதும் முதலமைச்சரது மனமாற்றத்திற்கு பல தரப்புக்களும் தொடர்ந்தும் முயன்று வருகின்றன.
தற்போது மிகமோசமான பின்னடைவினை அடைந்திருக்கும் கூட்டமைப்பினை தூக்கி நிறுத்த முதலமைச்சரினை பிரச்சார களமிறக்குவதே பொருத்தமானதென கூட்டமைப்பு தலைமைகள் பலவும் கருதுகின்றன.
முன்னதாக முதலமைச்சரின் முடிவை மீள்பரிசீலினை செய்ய மாகாண அமைச்சர்கள் முயன்றிருந்த போதும் அது வெற்றி பெற்றிருக்கவில்லை.
இந்நிலையினில் தற்போது வேட்பாளர்களுள் ஒருவரான சிறீதரன் நேரடியாக முதலமைச்சரினை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார்.அதுவும் வெற்றி பெற்றிராத நிலையினில் நேற்றைய தினம் பங்காளி கட்சி தலைவர்களான சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகிய இருவரும் நேரடியாக சென்று பேச்சுக்களை நடத்தியிருந்ததாக தெரியவருகின்றது.




0 Responses to முதலமைச்சரினை வளைத்து போட கூட்டமைப்பு குத்தி முறிகின்றது!