அதிமுக என்கிற கட்சியையும் பாஜக என்கிற கட்சியையும் மட்டும்தான் விமர்சித்தேன், தனிப்பட்ட மனிதர்களைக் குறித்து நான் விமர்சிக்கவில்லை என்று இ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இன்று தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அதிமுகவினர் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.. இதனால் சென்னை மக்கள் வெளியில் செல்லவும் தயங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. காரணம் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன், ஜெயலலிதா, மோடி சந்திப்புக் குறித்துக் கொச்சைப்படுத்திப் பேசினார் என்று கூறப்படுவதுதான்.இதற்கு இளங்கோவன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள இளங்கோவன், நான் அதிமுக என்கிற கட்சியையும், பாஜக என்கிற கட்சியையும் விமர்சித்துப் பேசினேனே தவிர இரு தனிப்பட்ட மனிதர்களைப் பற்றி எதுவும் விமர்சிக்கவில்லை. எனவே, மன்னிப்புக் கேட்கும் பேச்சுக்கே இடமில்லை.தமிழிசை எங்களுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை, தேர்தலில் கூட்டணி சேர மாட்டோம் என்று சொல்லட்டும், அப்போது வேண்டுமானால் நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to அதிமுக என்கிற கட்சியையும் பாஜக என்கிற கட்சியையும் மட்டும்தான் விமர்சித்தேன்: இ.வி.கே.எஸ்