Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மேற்பார்வையிலேயே தமிழகத்தில் அதிமுகவினர் இந்த அராஜகத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்ததுக் குறித்து காங்கிரஸ் தமிழகத் தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் கொச்சையாக கருத்து வெளியிட்டார் என்று அதிமுகவினர் அங்கங்கு வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.இது எம்பி, எம் எல் ஏக்கள் மேற்பார்வையில் நடக்கிறது என்பதால், இது ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் அராஜகமாக வெடித்து வருகிறது என்றும், இதைப் பார்த்துக்கொண்டு போலீஸ் சும்மா இருப்பது ஏன் என்றும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு கட்சி அலுவலகத்தை அதிகாலையில் ஆளும் கட்சித் தொண்டர்கள் அடித்து நொறுக்கி உள்ளார்கள், அப்படி என்றால் இனி ஜனநாயக நாட்டில் யாருக்கும் கட்சி நடத்த உரிமை இலையா? இதைப் பார்த்துக்கொண்டு மத்திய அரசு சும்மா இருப்பது ஏன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும் வைகோ கூறியுள்ளார். அதோடு தமிழகத்தில் அங்கங்கு நடக்கும் சாதி கலவரங்கள், மதுவுக்கு எதிரானப் போராட்டங்களில் இருந்து மக்களை திசை திருப்பவே தமிழக அரசின் இந்த அராஜகம் என்று வைகோ மட்டுமின்றி , திமுக பொருளாளர் ஸ்டாலின், காங்கிரஸை சேர்ந்த குஷ்பூ, விஜயதாரிணி ஆகியோர் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் அதிமுகவினர் நடத்தும் இந்த அராஜகப் போக்குக்கு இ.வி.கே.எஸ் இளங்கோவனும், அதிமுக இப்படியே தொடர்ந்தால் காங்கிரஸ் பதிலடி கொடுக்கும் என்றும், என்னதான் காங்கிரஸ் காந்தியவாதத்தைக் கடைப்பிடித்தாலும், வன்முறையை முறியடித்து, வன்முறையாலேயே வன்முறைக்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

0 Responses to ஜெயலலிதாவின் மேற்பார்வையிலேயே தமிழகத்தில் இந்த அராஜகம் நடக்கிறது: வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com