மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சிக் காலத்தின் போது வெள்ளை வான்களில் கடத்தி செல்லப்பட்ட நபர்களை பாதுகாப்பு அமைச்சின் கீழியங்கிய கொலைக் கும்பல், கொலை செய்து சடலங்களை கடலில் மூழ்கடிக்கச் செய்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும், முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான பிரியந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றின் போது அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களை கொலை செய்வதற்காக தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்தில் இணைந்துகொண்ட ஆயுதக் குழுக்களையும் கடந்த அரசாங்கம் பயன்படுத்தியது. கடந்த காலத்தில் அரசியல்வாதியாகவும், பாதுகாப்பு செயலாளராகவும் செயற்பட்ட கோத்தபாய ராஜபக்ஷ சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக செயற்பட்டார்.
அவர்களின் குற்றங்கள் மற்றும் சட்ட விரோத செயல்களை நியாயப்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான எனக்கு வழியுறுத்தினர். அதனை நிராகரித்தமையினால் என்னை மட்டக்களப்பிற்கு மாற்றம் செய்து, கிழக்கு ஆயுதக் கும்பல்களை பயன்படுத்தி கொலை செய்ய திட்டமிட்டனர். அதனாலேயே, நான் நாட்டை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.” என்றுள்ளார்.

0 Responses to கோத்தபாயவின் ஆயுதக் குழு வெள்ளை வானில் கடத்தியவர்களை கொலை செய்து கடலில் போட்டது: பிரியந்த ஜெயக்கொடி