Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் கூட்டமைப்பு தெற்கில் ஆட்சிபீடமேறும் தரப்புக்களுடன் கூட்டு சேர்ந்து அமைச்சரவையில் பங்கெடுக்கும். நானும் நிச்சயம் அமைச்சராவேன். தங்களது கோரிக்கைகளினை அப்போது நிறைவேற்றுவென உறுதி வழங்கியுள்ளார் கூட்டமைப்பின் தலைவர்களுள் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன்.

வவுனியாவின் கிராமங்கள் எல்லாம் தேர்தலிற்காக எட்டிப்பார்த்து வரும் அவர் மணியர்குளத்தில் நேற்று இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்திலேயே இவ்வாறு திருவாய் மலர்ந்துள்ளார்.

தேர்தல் காலத்தில் மட்டும் நீங்கள் எட்டிப்பார்த்துவிட்டு இப்போது நான் கேட்டவற்றில் எந்த உதவியினை வழங்கப்போகின்றீர்களனெ கேள்வி எழுப்பிய வேளையிலேயே தேர்தலின் பின்னர் கூட்டமைப்பு தெற்கில் ஆட்சிபீடமேறும் தரப்புக்களுடன் கூட்டு சேர்ந்து அமைச்சரவையில் பங்கெடுக்கும். நானும் நிச்சயம் அமைச்சராவேனென செல்வம் அடைக்கலநாதன் போட்டுடைத்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் வன்னி மாவட்டத்தில் களமறிங்கியுள்ளார்.

இதனிடையே கிழக்கில் கூட்டமைப்பினில் போடடியிடும் ஜனா என்பவரும் இதே கருத்தை கூறி வருகின்றார்.

முன்னைய ஆட்சி மாற்றத்தின் போது சுமந்திரனிற்கு மைத்திரி, ரணில் அமைச்சு பதவியினை வழங்குவது பற்றி பிரஸ்தாபித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to நான் அமைச்சராவேன்! போட்டுடைத்தார் செல்வம் அடைக்கலநாதன்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com