Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள பங்காளி கட்சிகளது வெற்றியை தமிழ் மக்கள் உறுதிப்படுத்தி கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதிவினை எதிர்காலத்தில் சாத்தியமாக்குவதற்காக தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய பங்காளிக்கட்சிகளது வேட்பாளர்களை விருப்பு வாக்குகளை அளித்து தெரிவு செய்ய முன்வர வேண்டுமெனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.க.சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தல் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டினில் உரையாற்றிய அவர் கூட்டமைப்பினை பதிவு செய்வதினில் முட்டுக்கடடை போடுவது தமிழரசுக்கட்சி தான்.கூட்டமைப்பினை பதிவு செய்வதற்கான அழுத்ததத்தினை பிரயோகிக்க தமிழரசுகட்;சி தவிர்ந்த ஏனைய பங்காளிக்கட்சிகளது பலத்தை அதிகரிக்க வேண்டும்.அதற்காக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் தமிழரசுக்கட்சி சார்ந்தவர்கள் வெற்றி கொள்ள வைக்கப்படவேண்டும்.

எனது கட்சி சார்ந்த டெலோ வேட்பாளர்களிற்கு விருப்பு வாக்கினை அளிப்பதுடன் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோரது வெற்றிக்கும் விருப்பு வாக்களிக்குமாறு சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 Responses to தமிழரசுக்கட்சிக்கு வேண்டாம்! பங்காளிகளிற்கு வாக்களிக்க கோரும் சிவாஜி!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com