Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“நான் 2013 ஆம் ஆண்டு மேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொலன்னாவ பிரதம அமைப்பாளர் பதவியை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியிருந்தேன். அப்போது, “தந்தையைப் போன்று மரணிக்க விருப்பமா?“ என அவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்” என்று ஐக்கிய தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

“மஹிந்த ராஜபக்ஷவின் குறித்த கேள்வி என்னைப் பெரிதும் அதிருப்தி அடையச் செய்தது. தந்தையைக் கொலை செய்த அடுத்த நாளே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்தேன். எனினும், அப்போதைய ஆளும் கட்சி அமைச்சர்கள் சிலர் அதனைத் தடுத்தனர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டு வாக்காளர்களுக்கு துரோகம் இழைக்கப்போவதில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் பக்கத்தில் இனி எந்தக் காலத்திலும் நிற்கப் போவதில்லை என்றும் ஹிருணிகா பிரேமசந்திர கூறியுள்ளார்.

0 Responses to ‘தந்தையைப் போல மரணிக்க விருப்பமா?’ என்று மஹிந்த என்னிடம் கேட்டார்: ஹிருணிகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com