இலங்கையின் வடக்கில் மனித உரிமை நிலவரம் மிகமோசமான நிலையில் காணப்படுவதாக ‘சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்’ என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் ஆராயுவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேசினி கொலன்னே இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “சட்டத்தின் ஆட்சி நல்லாட்சி மற்றும் மனித உரிமைகளிற்கு முக்கியத்துவத்தை வழங்குவது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் அடிப்படையில் இந்த அறிக்கைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். இலங்கையின் மனித உரிமை நிலவரத்தை சர்வதேச தராதரத்திற்கு உயர்த்துவதற்கு அரசாங்கம் ஆர்வம் கொண்டுள்ளது.
உலகின் எந்த நாட்டிலும் மனித உரிமை நிலவரம் 100 வீதம் சிறப்பானதாக காணப்படவில்லை, எனினும் அரசாங்கம் கடந்த காலங்கள் போல அல்லாது உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்பதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்கின்றது. மனித உரிமைமீறல்கள் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை சட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்க தயாராகவுள்ளது” என்றுள்ளார்.

0 Responses to வடக்கில் மனித உரிமை நிலவரம் மோசமாகவுள்ளது எனும் சர்வதேச அறிக்கை தொடர்பில் ஆராய்வு: அரசாங்கம்