Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தினில்  இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஸ்டி பிரேரிக்கப்பட்டுள்ள போதும் எந்தவகையான சமஸ்டி தீர்வென முடிவாகவில்லையென தெரிவித்துள்ளார் சுமந்திரன்.

சுமந்திரனின் முகநூல் சந்திப்பென நடத்தப்பட்ட நிகழ்விற்கு வாகனங்களினில் ஏற்றிவரப்பட்ட இளைஞர்கள் ஒருபகுதியினர் கலந்து கொண்ட நிகழ்வாக அது அமைந்திருந்தது. நிகழ்வினில் ஊடகவியலாளர்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையினில் சுமந்திரனிடம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றினில் எந்த வகை சமஸ்டி  சாத்தியம் என்று கேட்கப்பட்டிருந்தது.அதற்கு பதிலளித்த சுமந்திரன் சர்வதேசத்தின் அழுத்தங்கள் ஏற்பட அப்பொழுது பேரம்பேச்சு ஆரம்பமாகும். அப்போதுதான் என்னவகையான சமஸ்டி என்பது பற்றி கூறமுடியும் என்றார். ஆனால், சமஸ்டிக்கான அடிப்படை பண்புகள் அதில் இருக்கும் என்றார்.

ஆனால் ஐக்கியதேசிய கட்சி சமஸ்டியை எதிர்ப்பதாகச்சொல்கின்றதே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் அது தேர்தல்காலப்பேச்சு மட்டுமே என்றார். அவற்றை நாம் சீரியஸாக எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். ஆனால் உங்கள் பேச்சினையும் எவ்வாறு நம்புவதென எழுப்பப்பட்ட கேள்விக்கு அவரிடம் பதிலிருந்திருக்கவில்லை.

0 Responses to சமஸ்டி எந்தவகையென தெரியவில்லையாம்! சொல்கின்றார் சுமந்திரன்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com