தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தனக்கும் ஒத்துழைப்பு தரவில்லை என வன்னியில் போட்டியிடும் வேட்பாளரான திருமதி சி.சாந்தி என்பவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஒரு பெண் வேட்பாளராக யுத்த சுமைகளை சுமந்தவள் என்ற வகையில் கூட்டமைப்பில் நான் போட்டியிடுகின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் அவ்வளவாக ஆதரவு தரவில்லை.
ஒரு பெண் வேட்பாளர் போட்டியிடுகின்றார். அவர் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவள். அரச அதிகாரியாக இருந்தவள் என்பதை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. எனக்கு செல்வாக்கு உள்ள இடத்தில் அவர்கள் கூட்டுச் சேர விரும்புகிறார்கள். ஆனால் ஏனைய இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த கூட்டமைப்பினர் தயாராகவில்லை. எனக்கு ஆதரவு அதிகரிப்பதை அவர்கள் பெரிதாக விரும்பவில்லை எனவும் அவர் குற்றச்சாட்டியுள்ளார்.
ஏற்கனவே யாழினில் போட்டியிடும் மதனி நெல்சனும் இதே கருத்தினை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to கூட்டமைப்பு என்னையும் கைவிட்டது!