ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கடனாகக் கொடுத்த இரண்டு மில்லியன் ரூபாவை திரும்பக் கேட்டபோது வெள்ளைவானொன்றும் பொலிஸ் அதிகாரிகளும் எந்நேரமும் தனது வீட்டுக்கு வந்து மிரட்டல்களை விடுத்துச் சென்றதாக வெலே சுதா என்கிற கம்பள விதானகே சமந்தகுமார தெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வாவிடம் தான் வேலைசெய்ததாகவும், தேர்தல் வேலைகளுக்கென தனது வீட்டு அலுமாரியில் வைத்திருந்த இரண்டு மில்லியன் ரூபாவையே வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
7.05 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான வெலே சுதா என்கிற கம்பள விதானகே சமந்தகுமார கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை சாட்சியமளிக்கையிலேயே இவ் வாறு கூறினார். கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலேயே இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வெள்ளைவானை அனுப்பி தன்னைக் கொலைசெய்ய முயற்சிப்பது துமிந்த சில்வாதான் என துமிந்த சில்வாவின் செயலாளர் ஜிவ் தனக்குத் தெரிவித்ததாகவும், ஜிவ் என்பவர் மாதிவெல பகுதியில் தனக்குச் சொந்தமான வீடொன்றிலேயே தங்கியிருந்ததாகவும் வெலே சுதா தெரிவித்தார். ஜிவ் என்ற நபர் கூறியதைப்போல வெள்ளைவான் ஒன்று தன்னைப் பின் தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
2011 ஜனவரி மாதம் 26ஆம் திகதி தான் பிணையில் வெளிவந்த நான் வெள்ளை வானில் வருபவர்கள் தன்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் போலி கடவுச்சீட்டொன்றின் மூலம் இந்தியாவுக்குச் சென்றதாகவும், கொடுத்த கடனை திரும்பக் கேட்டதாலேயே துமிந்த சில்வா தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார் என்றும் வெலே சுதா நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
துமிந்த சில்வா என்நேரமும் எனது கைத்தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னை வருமாறு கூறியபோதும் எனது வீட்டில் குடியிருந்த ஜிவ் திறப்பை பாரம்கொடுத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றமை, என் பின்னால் எந்நேரமும் வெள்ளைவான் ஒன்று பின்தொடர்ந்தமை போன்ற சம்பவங்கள் துமிந்த சில்வா கொலை செய்ய முயற்சிக்கிறார் என ஜிவ் என்னிடம் கூறியது உண்மை என்பதை ஊர்ஜிதப்படுத்தியது என்று நீதிமன்றத்தில் கூறிய வெலே சுதா, துமிந்த சில்வாவின் அரசியல் வேலைகளுக்கு ஒருபோதும் தான் இணைந்துகொள்ளவில்லை என்றாலும் அவர் எனக்கு ஷெட் ஒன்று தருவதாக கூறியிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
போலி கடவுச்சீட்டொன்றின் மூலம் இந்தியாவுக்குச் சென்று சுமார் ஐந்து மாதங்களின் பின் இலங்கைக்கு வந்ததும் ஒடேல் நிறுவனத்தினுள் துமிந்த சில்வாவின் செயலாளர் ஜிவ் தன்னைச் சந்தித்தபோது துமிந்த சில்வாவுக்கு தொலைபேசி மூலம் “சேர் வெலே சுதா இலங்கைக்கு வந்திருக்கிறார்” என்று கூறியதை நான் கேட்டேன். எனவே எனக்கு மீண்டும் மரண அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை உணர்ந்து மீண்டும் போலிக் கடவுச்சீட்டின் மூலம் இந்தியாவுக்கு சென்றதாக வெலே சுதா தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தான் நீதிமன்றத்தில் ஆஜராகும் விருப்பத்துடன் இலங்கைக்கு வந்தாலும் மரண அச்சுறுத்தல் இருப்பதால் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாகத் தெரிவித்த வெலே சுதா, தனக்கு மரண அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை எவருக்கும் தெரியப்படுத்தவில்லையென்றும் கூறியுள்ளார்.
7.05 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான வெலே சுதா சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிபதியினால் தீர்மானிக்கப்பட்டதற்கமைய விசாரணைகள் தொடர்கின்றன. இரகசியப் பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வெலே சுதா பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் இரகசியப் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

0 Responses to துமிந்த சில்வாவுக்கு கொடுத்த பணத்தைக் திரும்பக் கேட்டபோது வெள்ளைவானில் வந்தோரால் மிரட்டப்பட்டேன்: வெலே சுதா