நேற்று புதன்கிழமை இரவு சீனாவின் வடகிழக்கே உள்ள துறைமுக நகரமான டியான்ஜின் இலுள்ள இரசாயன சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட இரு பாரிய வெடி விபத்துக்களில் அந்த நகரின் ஒரு பகுதி முற்றாகத் தீயில் சிக்கி மிகப் பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது 44 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 520 பேர் வரை தீவிரமான எரிகாயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
குறித்த இரசாயனக் கிடங்குக்கு அண்மையில் இருந்த பல வீடுகள் தரை மட்டமாகி நூற்றுக் கணக்கான கார்கள் தீயில் முற்றாகக் கருகி சேதமடைந்ததுடன் பத்தாயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர். நீண்ட உயரத்துக்குப் பல இடங்களில் கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைப்பதற்கு உடனடியாக 1000 தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப் பட்டதுடன் 200 இற்கும் அதிகமான ஆயுதம் தாங்கிய போலிசாரும் இரசாயன எதிர்ப்பு யுத்தக்கால படையினரும் உடனே பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். இரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீ என்பதால் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முடியாத சூழலின் மத்தியில் மணலைப் பாவித்துப் பல மணி நேரங்களுக்குத் தீயணைப்பு வீரர்கள் போராடினர். மேலும் கொல்லப் பட்டவர்களில் 12 தீயணைப்பு வீரர்களும் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் அறியப் படாத நிலையில் முதலாவது வெடிப்பு 3 டன் TNT இற்கு சமனானது என்றும் 2 ஆவது வெடிப்பு 21 டன் TNT இற்குச் சமனானது என்றும் கணிக்கப் பட்டுள்ளது. மேலும் முதல் வெடிப்பு ஏற்பட்டு 30 செக்கன்களுக்குள் 2 ஆவது வெடிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு தற்போது தீ ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளது என அறிவிக்கப் பட்டுள்ள போதும் பலி எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகின்றது. காயமடைந்தவர்களில் குறைந்தது 32 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த வெடி விபத்தால் ஏற்பட்ட அதிர்வலைகள் (shock waves) பல கிலோமீட்டர்கள் தூரத்துக்கு உணரப் பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். சுமார் 13 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட டியான்ஜின் நகரம் தலைநகர் பீஜிங்கிற்கு அண்மையில் தான் உள்ளது. மேலும் இங்கு இந்த வெடி விபத்தின் பின்னர் தீயணைப்பு வீரர்கள் உட்படப் பலர் காணாமற் போயுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to சீனாவின் டியான்ஜின் நகர வெடி விபத்தில் 44 பேர் பலி, 520 பேர் வைத்தியசாலையில் அனுமதி