இலங்கையின் 15வது நாடாளுமன்றத் தேர்தல் ஒருவிதமாக நடந்து முடிந்துள்ளது.
இத்தேர்தல் பற்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும், மகிழ்ச்சியினையும் வெளியிட்டுவருகின்றனர்.
நீதியானதும், நேர்மையானதுமான தேர்தல் இலங்கையில் நடத்தப்பட்டுள்ளமையானது பாராட்டத்தக்கது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனது பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.
பல்வேறு பட்ட கருத்துக்கள், கட்சித் தாவல்கள் என்று எல்லாத்துக்குமே இத்தேர்தலில் பஞ்சமிருந்திருக்கவில்லை.
பொதுவாக இலங்கையில் நடைபெறும் தேர்தல்கள் எதுவாக இருந்தாலும், வன்முறைகளும், அடாவடித்தனமும், மிரட்டல்களும், குண்டுவெடிப்புக்களும் என்று தேர்தல் வன்முறைகள் பெருக்கெடுத்திருந்திருக்கும்.
ஆனால் இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவ்வாறான அசம்பாவிதங்கள் அதிகம் நடைபெற்றதாக பதிவுகள் இல்லை.
இது ஒரு புறமிருக்க, இத் தேர்தலில் பல்வேறு சுவார்ஷ்யமான சம்பவங்களும், தேர்தல் முடிவுகளும் காட்டிவிட்டிருக்கின்றன.
எது நடக்கவிருக்கின்றதோ அது நன்றாகவே நடக்கும் என்பதைப்போல இப்பொழுது இலங்கை அரசியலில் எது நடக்க இருக்கிறதோ அதை அமெரிக்கா நடத்தும் என்று துணிந்து கூறலாம்.
2009ம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு இலங்கை அரசியலை சீனாவும் மகிந்தரும் தீர்மானித்திருந்தாலும், 2015ம் ஆண்டில் இருந்து அது மாற வேண்டும் என்பதை கணக்கு போட்டது அமெரிக்கா, துணை நின்றது இந்தியா.
அதில் வெற்றியும் கண்டது அமெரிக்கா. ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வீழ்த்த தமிழ் மக்கள் ஒன்று திரண்டார்கள். அதில் அவர் தோற்றும் போனார். அவர் தோல்வியில் தமிழ், தமிழ் முஸ்லிம் மக்களின் பங்கு கனதியானதும் கூட.
அத் தேர்தலில் யுத்த வெற்றிநாயகனாகத் திகழ்ந்த மகிந்த ராஜபக்ச தோல்வியை தழுவிக்கொண்டார். அவரின் தோல்வியினை, ஆழ்ச்சியிழப்பினை மொத்தமாக தமிழ் மக்களின் கோபமாக, எதிர்ப்பாக, பழிவாங்களாக, எடுத்துக்கொள்ள முடிந்தது.
அதில் உண்மையும் இருந்தது. ஏனெனில் மகிந்த ராஜபக்சவினை தாம் நேரடியாக இந்த வழிமுறையிலேனும் பழிவாங்க வேண்டும் என்று துடித்தார்கள் தமிழ் மக்கள். அதன் வெளிப்பாடே அது.
ஆனால் இம்முறை நடந்த பொதுத் தேர்தலில் இன்னுமொரு கங்கதியை தேர்தல் முடிவுகள் விட்டுச்சென்றுள்ள. அதாவது குருநாகல் மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற முடியும் என்று களத்தில் குதித்தவருக்கு கிடைத்த தோல்வி தான் அது.
இந்த நாட்டில் பங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டை மீட்டதாக சொன்ன மகிந்தரின் போர் வெற்றிக்கோசம் செல்லாக்காசாகிவிட்டது என்பதே அது....!
தன்னை மக்கள் வெறுக்கவில்லை என்று அடிக்கடி மேடையில் முழங்கியவருக்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு.
குருநாகலில் மகிந்தரை எதிர்க்கும் கூட்டம் ஒன்றும் அங்கிருக்கின்றது.
இதனால் அவருக்கு விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை குறைந்தது. அதே நேரம் யுத்தத்தையும், போரையும் புலிகளையும் வைத்து வெற்றியீட்டலாம் என்று நினைத்தால் அது முடியாது என்பதையும் தேர்தல் முடிவு உணர்த்தியிருக்கிறது.
ஆம் நடந்து முடிந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் பிரதமர் கனவு முற்றாக தகர்த்தெறியப்பட்டிருக்கின்றது. அது இம்முறை தமிழ் மக்களால் தகர்த்தெறியப்படவில்லை. அது சிங்கள மக்களால் தகர்க்கப்பட்டுள்ளது. அதனால் தான் தேர்தல் முடிவுகள் சரியாக வெளிவர முன்னரே தனது தேர்தல் தோல்வியை அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.
இது மகிந்தவிற்கு மாத்திரமல்ல. முன்னாள் பாதுகாப்புத் தளபதி பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவிற்கும் சேர்த்தே உணர்த்தப்பட்டிருக்கின்றது.
விடுதலைப்புலிகளை அழித்தேன் என்று இரண்டு தடவைகள் கூறி மகிந்தர் ஆட்சிக்கு வந்தார். மூன்றாவது தேர்தலில் அந்த பேச்சுக்களுக்கு சிங்கள மக்கள் மத்தியில் அவ்வளவு முன்னுரிமை கிடைக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே நிலமை தான்.
ஆனால் சரத் பொன்சேகா தனது பொதுத் தேர்தல் பிரசாரத்தில் விடுதலைப்புலிகளை அழித்தது நான் தான் என்றார்.
மகிந்தவால் இது முடித்திருக்க முடியாது என்றும் சொன்னார். தேர்தல் மேடைகளில் அதிகம் பயங்கரவாதத்தை அழித்தேன், அழித்தேன் என்றார். ஆனால் அவருக்கும் மக்கள் வாக்கு அழிக்கவில்லை.
யுத்த நாயகர்களாக தங்களை என்றைக்கும் சிங்கள மக்கள் பார்ப்பார்கள். தாங்கள் தான் சிங்கள மக்களின் மீட்பர்கள் என்று தங்களைத் தாங்ளே சொல்லிக் கொண்டவர்களை சிங்கள மக்களே நிராகரித்துள்ளார்கள்.
நாட்டில் இப்பொழுது எது பொய் எது உண்மை என்று மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள்.
வடக்கில் புலிகள் உருவாகின்றார்கள். வெளிநாட்டில் நிதி சேகரிக்கின்றார்கள். இந்தியாவில் அவர்களின் செயற்பாடு தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்றார்கள்.
புலிகளின் ஆயுதப்பலம் இன்னமும் அப்படியே தான் இருக்கின்றது என்றார்கள். முன்னாள் போராளிகள் ஒன்று சேர எத்தனிக்கின்றார்கள். என்றும், மைத்திரி ரணில் மீண்டும் நாட்டை பிரிவினைவாதிகளின் கையில் கொடுக்கப்போகின்றார்கள் என்றவர்கள்,
அதற்கு இடமளிக்க நாம் விடமாட்டோம். இராணுவ வீரர்கள் இரத்தம் சிந்தி பெற்ற இந்த வெற்றியை நாம் காட்டிக்கொடுக்க மாட்டோம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புலிகள் கோரியதையே கோருகின்றது அவர்கள் இந்த நாட்டை துண்டாடப் பார்க்கின்றார்கள்.
விடுதலைப்புலிகளின் மறுவடிமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்று சிங்கள மக்கள் மத்தியில் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்தார்கள்.
ஆனால் தோல்வி உறுதி என்றாகிய போது தான் இன்னொரு தந்திரத்தை இந்த யுத்த நாயகர்கள் கையாண்டார்கள்.
பிரபாகரன் கொல்லப்படவில்லை. அவர் இராணுவத்தினரிடம் இருந்து தப்பித்து இந்தியா சென்றுவிட்டார். மீண்டும் புலிகள் அவர் தலமையில் போராடத் தொடங்குவார்கள் என்று சிங்களப் பத்திரிகையில் செய்தியும், ஒரு புத்தகமும் வெளியிட்டார்கள் இவர்கள்.
இவை யாவும் சிங்கள மக்கள் மத்தியில் பயணலிக்கவில்லை. எல்லாமே புஸ்வானமாகியது. தேர்தல் முடிவுகள் யாவும் தலைகீழாகவே மாறிப்போயின.
ஆக….! யுத்த வெற்றி என்பதை வைத்தோ, அல்லது புலிப்பூச்சாண்டியை காட்டியோ இனிவருங்காலங்களில் எந்தவொரு நபராலும் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற முடியாது என்பதை இத்தேர்தலில் மகிந்த, சரத் பொன்சேகா தோல்விகள் உறுதிப்படுத்துகின்றன.
இனியும் புலிப்புராணம் பாடி பயனேதுமில்லை…! மக்கள் மாற்றங்களையே விரும்புகின்றார்கள். அதற்கு இத் தேர்தலே தக்கசான்று...!
எஸ்.பி.தாஸ்

0 Responses to தேர்தலில் யுத்த வெற்றி நாயகர்கள் தோல்வி! - எஸ்.பி.தாஸ்