மோடி-ஜெயலலிதா சந்திப்பில் பயன் என்ன என்கிற ஆதங்கத்தில்தான் அப்படிச் சொன்னேன் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜெயலலிதா தமது இல்லத்தில் விருந்து வைத்தார்.இதை இளங்கோவன் கொச்சைப்படுத்திப் பேசியதாக அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் இளங்கோவனுக்கு எதிராக இன்று நான்காவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தப் போராட்டத்தில் இளங்கோவனின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டும், காங்கிரஸ் அலுவலகங்கள் தாக்கப்பட்டும் வந்த நிலையில், இன்று இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூவின் வீடுகளை முற்றுகையிட்டும் தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இ.வி.கே.எஸ்.இளங்கோவன், இவர்கள் இருவர் சந்திப்பால் நாட்டுக்கு நடந்த நல்லது என்ன என்கிற ஆதங்கத்தில் ரகசிய உடன்பாடு உள்ளது என்று கூறினேன், அதைத் திரித்து சித்தரித்து உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.மேலும், தனிப்பட்ட எவரின் மனதையும் புண்படுத்தும்படி நான் கருத்துக் கூறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்தபோது, எங்களைப் பொருத்தவரை அது முடிந்துபோன விஷயம் என்றும், தலைவர் தவறான கண்ணோட்டத்தில் எதையும் கூறவில்லை என்பதைத் தெளிவுப் படுத்தி உள்ளதால், தமிழிசை சவுந்திரராஜனுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றும் கூறயுள்ளார்.

0 Responses to மோடி- ஜெயலலிதா சந்திப்பில் பயன் என்ன என்கிற ஆதங்கத்தில்தான் சொன்னேன்:இ.வி.கே.எஸ்