இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மை அறியப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதன்மூலமே நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாவது, "நாட்டின் இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். இது முக்கியமான பிரச்சினை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பதில் வழங்கப்படவேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். சுதந்திரமான தேர்தல் முறைமைக்குப் பின் எமது பிரச்சினைக்கு ஒரு சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும்.
எமக்கு ஓர் அரசியல் தீர்வு தராவிட்டால் இன அழிவு ஏற்படும். சர்வதேசம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். அதுதான் எங்கள் செய்தி. இந்தத் தேர்தலில் தமிழ் மக்களாகிய உங்கள் வாக்கு தெளிவான செய்தியை வெளிப்படுத்தவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to போர்க்குற்றங்கள் தொடர்பில் உண்மை அறியப்பட்டாலே நல்லாட்சி ஏற்படும்: சம்பந்தன்