Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தயாநிதி மாறன் வழக்கில் மத்திய அரசு சிபிஐக்கு உதவி செய்யுமா என்று நாடாளுமன்றத்தில் தமிழக அதிமுக எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.

பிஎஸ்என்எல் முறைகேடு விவகாரத்தில் வழக்கில் சிக்கி இருக்கும் தயாநிதி மாறனின் முன் ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து நேற்று தீர்ப்பளித்தது.இந்நிலையில் தயாநிதி மாறன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.அந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்த நிலையில் தயாநிதி மாறனின் ஜாமீனை செப்டெம்பர் 14ம் திகதி வரைக்கும் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த இடைப்பட்ட காலத்தில் சிபிஐ விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் வழக்கில் சிபிஐக்கு தேவையான ஒத்துழைப்புக்களை மத்திய அரசு வழங்குமா என்று அதிமுக எம்பிக்கள் கோரிக்கை எழுப்பினர்.இதற்கு பதில் அளித்த தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய அரசு சிபிஐக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to தயாநிதி மாறன் வழக்கில் மத்திய அரசு சிபிஐக்கு உதவி செய்யுமா?: தமிழக எம்பிக்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com