Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் கொலையாளிகள் என்று சொல்லப்படும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் வழக்கு முடிவடைந்த நிலையில் தீர்ப்புத் திகதி அறிவிக்கப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ராஜீவ் கொலையாளிகள் என்று சொல்லப்படும் முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டவர்களின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறித்த நிலையில், இவர்களை விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசு மேற்கொள்ளலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.இதையடுத்து ராஜீவ் கொலையில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் நளினி உள்ளிட்ட 4 பேரையும் சேர்த்து முருகன் பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டவர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது.

ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தல் மனுத் தொடுத்து அவ்வழக்கின் விசாரணை இன்று முடிவடைந்த நிலையில், இதுக்குறித்த எழுத்துப்பூர்வமான அறிக்கையை மத்திய அரசு சமர்ப்பிக்கக் வேண்டும் என்று கூறியதோடு, தீர்ப்பையும் திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

0 Responses to பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் வழக்கு முடிவடைந்த நிலையில் தீர்ப்புத் திகதி அறிவிக்கப்படவில்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com