இலங்கையின் 22வது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள விசேட நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்து பதவி ஏற்கவுள்ளார்.
சுதந்திர இலங்கையின் 15வது பாராளுமன்றத்துக்கான அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளுமென தெரிவிக்கப்பட்டு வரும் போதும் இன்று அது இடம்பெறமாட்டாது. பெரும்பாலும் எதிர்வரும் வாரத்திலேயே புதிய அமைச்சரவையின் சத்தியப்பிரமாணம் இடம்பெறும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது.
இலங்கையின் வரலாற்றில் பொதுத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற பெருமைக்குரியவர் என்ற வகையில் நடந்து முடிந்த தேர்தலில் 5,00,566 விருப்பு வாக்குகளை ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க முதல் தடவையாக 1993 ஆண்டு மே 7 ஆம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அப்போதைய ஜனாதிபதி டீ. பி. விஜேதுங்கவின் முன்னிலையிலேயே அன்று சத்தியப் பிரமாணம் இடம் பெற்றது. 22 வருடங்களுக்குப் பின்னர் தற்போது 22 ஆவது பிரதமராகப் பதவியேற்கின்றார்.
1993 ஆம் ஆண்டு அவர் பிரமராகப் பதவியேற்க முன்பதாக கைத்தொழில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம், கல்வி, இளைஞர் விவகாரம் ஆகிய அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க இரண்டாவது முறையாக 2001 டிசம்பரிலும் மூன்றாவது முறையாக இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலும் பிரதமராகச் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டவராவார்.
சுதந்திர இலங்கையின் பிரதமர்களாக டீ.எஸ்.சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா, சேர் ஜோன்.கொத்தலாவல, விஜயானந்த தஹநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன, ஆர்.பிரேமதாச, டீ.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரத்னசிறி விக்ரமநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ, டி.எம்.ஜயரத்ன ஆகியோர் பதவி வகித்துள்ளமை குறிப் பிடத்தக்கது.
இலங்கையின் 22வது பிரதமராக இன்று ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பதுடன் எளிமையாக நடைபெறும் இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கட்சிகளின் தலைவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

0 Responses to புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்பு!