Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டை முன்னோக்கி கொண்டு செலுத்தும் வேலைத்திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும், நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு வரையில் ஜனாதிபதித் தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ நடத்தப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டை வளம்மிக்கதாக முன்னெடுத்துச் செல்வதற்கு அர்ப்பணிப்புடன் அனைவரும் ஒன்றுசேர்ந்து செயற்பட முன்வரவேண்டும் என அனைத்துக் கட்சிகளிடம் கேட்டுக் கொண்ட அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் மறுசீரமைப்பு செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.

ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகளை எடுக்கக் கிடைத்திருக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்துவதற்குப் பின்நிற்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பட்டாலி சம்பிக்க ரணவக்க மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

0 Responses to நாட்டை முன்னோக்கி செலுத்தும் வேலைத்திட்டத்திற்கு த.தே.கூ ஒத்துழைப்பு வழங்கும்: சம்பிக்க ரணவக்க நம்பிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com