Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னையில் மழை நிவாரண பணிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா பார்வையிட்டு வருகிறார்.

சென்னையில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித தலைவர் மேற்கொள்ளும் மழை நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார் ஜெயலலிதா. இந்தக் கூட்டத்தில் வளர்மதி, கோகுல இந்திரா, வேலுமணி, வைத்திய லிங்கம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர். சென்னை கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டபேரவை தலைமைச் செயலரும் கலந்துக்கொண்டார் என்று தெரிய வருகிறது.

இதையடுத்து வட சென்னையில் தண்டையார் பேட்டை, எழில் நகர், கொளத்தூர் ஆகிய தொகுதிகளைப் பார்வையிடும் ஜெயலலிதா, அண்ணா நகர் எம்எம்டிஏ காலனி உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் பார்வையிடுகிறார் என்று தெரிய வருகிறது.

0 Responses to சென்னையில் ஆறு தொகுதிகளில் மழை நிவாரண பணிகளை முதல்வர் பார்வையிடுகிறார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com