மழை நிவாரணப் பணிகளை நேரில் பார்வையிட்டபோது, உங்களுக்குப் பாதுகாப்பாக நான் இருக்கிறேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மழை நிவாரணப் பணிகளை நேரில் கண்டு ஆய்வு நடத்த முதல்வர் ஜெயலலிதா அணி வகுக்கும் கார்களுடன் புறப்பட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை பெய்யும் என்று ஏற்கனவே, அரசு தயார் நிலையில் இருந்தது. இருப்பினும், சில மாதங்களில் பெய்ய வேண்டிய மழை சில நாட்களில் கொட்டியுள்ளது.இதனால் பாதிப்புக்கள் இடர்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது.
இருப்பினும் மழை பாதிப்பு என்றதும் அரசு இயந்திரம் முடிக்கிவிடப்பட்டு, மீட்புப் பணிகளில் அரசு அதிகாரிகள், காவல்துறை ஊழியர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர் என்று பலரும் ஈடுபட்டுள்ளனர். சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. தொற்று நோய் பாதிக்காமல் இருக்க 6 மருத்துவ சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்று அவர் கூறினார். கடைசியாக உங்களுக்குப் பாதுகாப்பாக நான் இருக்கிறேன், கவலைக்கொள்ள வேண்டாம் என்றும் ஜெயலலிதா கூறினார்.

0 Responses to உங்களுக்குப் பாதுகாப்பாக நான் இருக்கிறேன்: முதல்வர் ஜெயலலிதா