Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக இலங்கை அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக அமெரிக்காவின் தேசப்பற்றுச் சட்டத்தை மாதிரியாகக் கொண்ட புதிய சட்டமொன்றைக் கொண்டுவரவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.

இலங்கையில் ஆயுத மோதல்கள் ஆரம்பித்த பின்னர், அதனைக் கையாள்வதற்கான பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை இலங்கை அரசாங்கம் கொண்டு வந்திருந்தது. ஆனாலும், ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அந்தச் சட்டத்தை தொடர்ந்தும் வைத்திருப்பது சர்வதேச ரீதியில் பாரிய விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்திலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சு, நீதியமைச்சு, சட்ட வரைஞர் திணைக்களம் ஆகியன பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டத்தை வரைந்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், எந்தவொரு பயங்கரவாதத்தையும் எதிர்க்க சர்வதேச தரத்திலான சட்டமாக இது அமையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டம், 1979இல் தற்காலிக ஏற்பாடாக கொண்டுவரப்பட்டாலும், 1982இல் அது நிரந்தரச்சட்டமாயிற்று. இந்தச் சட்டம், குற்றஞ்சாட்டாமல் ஒருவரைத் தடுத்து வைக்க வகை செய்கின்றது.

0 Responses to பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலாக புதிய தேசப்பற்றுச் சட்டம்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com