தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை முன்னிறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ச்சியாக 10வது நாளாக முன்னெடுத்துள்ள நிலையில், ‘அவர்களின் விடுதலைக்கான அழுத்தங்களை வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தி இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனும் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அந்தக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அடுத்த கட்ட முன்னைப்புக்கள் தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி (நாளை செவ்வாய்க்கிழமை) மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனும் பேசப்படும்: த.தே.கூ