Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீதான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவற்காக அரசாங்கம் அமைத்துள்ள விசேட நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை முதல் தன்னுடைய செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக சட்டத்துறையில் சுமார் 30 வருட கால அனுபவம் கொண்ட ஐராங்கனி பெரேரா நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எவ்வித வழக்கு விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான அழுத்தங்கள் கடந்த நாட்களில் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையிலேயே விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சுமார் 215 தமிழ் அரசியல் கைதிகள், பல வருட காலமாக நாடாளாவிய ரீதியில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 39 பேருக்கு அண்மையில் அரசாங்கம் பிணை வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களை விசாரிக்க இன்று முதல் விசேட நீதிமன்றம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com