Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மழை வெள்ள பாதிப்புக் காரணமான மன உளைச்சலுக்கு 104 என்கிற எண்ணில் தொலைப்பேசி அழைப்பை அழைக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த 33 நாட்களுக்குப் பின்னர் மழை வெள்ள பாதிப்புப் பகுதிகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், இம்மாவட்ட பாதிப்புப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் கவுன்சிலிங் வழங்கும் பணிகளை நேற்று முதல் மேற்கொண்டுள்ளது.இந்நிலையில் இன்று தமிழக அரசு அறிவித்துள்ள அறிக்கையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கவுசிலிங் வழங்க 104 என்கிற தொலைப்பேசி எண்ணில் அழைக்கவும் என்று அறிவுறுத்தி உள்ளது.

அதாவது மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களில் பலரும் இன்னமும் இயல்பு மன நிலைக்குத் திரும்பாமல் அவர்களை மன உளைச்சல், பதற்றம், அச்சம் ஆட்டுவிக்கும். இவர்கள் இதுக்குறித்து யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள முடியாமல் அச்சத்தில் இருப்பார்கள். இவர்களுக்கு உதவும்விதமாக 104 என்கிற தொலைப்பேசி எண்ணில் தொடர்புக் கொண்டால், அங்கு எந்நேரமும் காத்திருக்கும் 3 மனநல மருத்துவர்கள் மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்குவார்கள் என்று அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மற்றப்படி வருடத்தின் அனைத்து நாட்களிலும் இயங்கும் 104 என்கிற எண்ணை வழக்கமான மருத்துவ ஆலோசனைக்கும் தொடர்புக் கொள்ளலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Responses to மழை வெள்ள பாதிப்புக் காரணமான மன உளைச்சலுக்கு 104ஐ அழைக்கலாம் : தமிழக அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com