தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் பெருமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்குள் சிக்கி உயிரிழந்த 35 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ள உடலங்கள் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்படுகின்றது.
இதனிடையே, கடந்த 3 நாட்களாக நடந்த மீட்புப் பணிகளில் சுமார் மூன்றரை இலட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 7 இலட்சம் பேர் அவர்களாகவே வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த 10 இலட்சம் பேரும் உணவு, உடை, தங்கும் இடமின்றி தவிக்க நேரிட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக 4327 இடங்களில் தற்காலிக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்கள் மீட்கப்பட்டு இந்த முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே சென்னை புறநகர் பகுதிகளில் இன்ன மும் சுமார் 5 இலட்சம் பேர் வெள்ளத்தில் இருந்து வெளியேற இயலாமல் தத்தளித்தப்படி உள்ளனர். அவர்களை மீட்க இராணுவத்தினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களுக்கு இதுவரை 45 இலட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலமாகவும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

0 Responses to சென்னை வெள்ள அனர்த்தம்; 35 உடலங்கள் மீட்பு, உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அச்சம்!