இலங்கையின் இனங்கள், மதங்கள் மற்றும் மொழிகள் மத்தியில் சகவாழ்வு என்பது அமெரிக்க அரசின் இலங்கை தொடர்பான கொள்கையில் மிக முக்கியமான ஒரு கருப்பொருள் ஆகும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ், சிங்கள மொழிகள் இரண்டு ஆட்சி மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் நடைமுறை ஆக்கப்படும் அதிகாரத்தையும், அதேபோல் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்கள் மத்தியிலான சகவாழ்வை உறுதிப்படுத்தும் அதிகாரத்தையும் கொண்டுள்ள தேசிய கலந்துரையாடல் அமைச்சை, ஒரு முக்கியமான ஓர் அமைச்சாக நாம் கருதுகிறோம். இந்த பின்னணியில் உங்கள் அமைச்சின் செயற்பாடுகளுக்கு அமெரிக்காவின் நல்லெண்ண ஒத்துழைப்பு வழங்கப்படும்” என்று அமெரிக்கத் தூதர், மனோ கணேசனிடம் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கையில் இன, மத, மொழி சக வாழ்வை அமெரிக்கா வலியுறுத்தல்!