Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உரிமை மீறலில் ஈடுபட்ட கருணாநிதிக்கு வயது மூப்பு காரணமாக தண்டனையில்லை, கண்டனம் மட்டுமே தெரிவிக்கப்படுகிறது என்று, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி சட்டப்பேரவையில் வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம், வீட்டு வசதி மானியம் குறித்துப் பேசாததை பேசினார் என்று கருணாதி கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்களை ஆய்வு செய்து பரிசீலிக்க ஒழுங்கு முறைக் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஒழுங்கு முறைக் குழுவின் சார்பில் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கருணாநிதி உரிமை மீறலில் ஈடுபட்டது உண்மைதான் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து அவைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கருணாநிதி மீது உரிமை மீறல் குற்றசாட்டை வைத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.அதோடு கருணாநிதி மீது வயது மூப்பு காரணமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்வதாக சபாநாயகர் தெரிவித்து, இனி சட்டப்பேரவையில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைப்பெறக் கூடாது என்றும் மேலும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to வயது மூப்பு காரணமாக கருணாநிதிக்கு தண்டனையில்லை கண்டனம் மட்டும்: சபாநாயகர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com