வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் வெற்றி பெற்று முதல்வரானால் விவசாயக் கடன்களை ரத்து செய்வேன் என்று, பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சிதம்பரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், நான் முதல்வரானால் விவசாயக் கடன்களை ரத்து செய்வேன் என்றும், காவல்துறையில் அரசியல் தலையீடு இருக்காது என்றும் கூறியுள்ளார்.இலவசங்களை ரத்து செய்து, இலவசமாக சுகாதாரம் மற்றும் கல்வி மட்டும் வழங்கப்படும்
என்றும் கூறினார்.
இன்று முதல் மூன்று நாட்களுக்கு பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை நகர் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். அதாவது நகரின் மக்கள் தொகை பெருகிவரும் இவ்வேளையில், சென்னைக்கு உடனடியான தேவை என்ன என்கிற ஆய்வை சென்னை மக்களை நேரில் சந்தித்து பசுமைத் தாயகம் அமைப்பு ஆய்வு மேற்கொள்ளும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

0 Responses to நான் முதல்வரானால் விவசாயக் கடன்கள் ரத்து: அன்புமணி ராமதாஸ்