Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மகளிர் அணி தலைவி பொறுப்பிலிருந்து விஜயதாரணி விடுவிக்கப்பட்டதாக் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குள் உட்கட்சிப் பூசல் பூதாகரமாக கிளம்பிக் கொன்டிருந்த நிலையில், ராகுல்காந்தியும் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கோஷ்டிப் பூசல் இல்லாமல் எதிர்க்கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு அறிவுறுத்தி இருந்தார்.இந்நிலையில்தான், விஜயதாரணியை மகளிர் காங்கிரஸ் தலைவி பொறுப்பிலிருந்து விடுவிப்பதாகவும்,இவருக்கு பதிலாக திண்டுக்கல் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருந்த ஜான்சி ராணி, தமிழக காங்கிரஸ் கமிட்டி மகளிர் காங்கிரஸ் தலைவியாக பொறுப்பேற்பார் என்றும் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள விஜயதாரணி, ராகுல் தமக்கு அநீதி இழைத்துள்ளார் என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

0 Responses to தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மகளிர் அணித் தலைவி பொறுப்பிலிருந்து விஜயதாரணி விடுவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com