Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று, அக்கட்சியின் தலைவர் சரத் குமார் கூறியுள்ளார்.

இன்று போயஸ் கார்டணில் உள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் ஜெயலலிதாவை சந்தித்த சரத் குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் அதிமுகவுடன் இணைய விருப்பம் தெரிவித்தால், அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதாக சரத் குமார் தெரிவித்தார். ஏற்கனவே, கூட்டணியில் இருந்த கட்சிதான் என்பதால் புரட்சித் தலைவி அம்மாவுக்கு ஆதரவாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

எத்தனை தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ள சரத் குமார் பாஜகவில் அண்மையில் இணைந்தது பற்றி எதுவும் கூறவில்லை.

0 Responses to அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு: சரத்குமார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com