Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வயதான கருணாநிதி ஜெயலலிதா ஆட்சி வேண்டுமா இல்லை இளைஞர் ஆட்சி வேண்டுமா என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தேமுதிக மக்கள் நலக் கூட்டணியுடன் இணைத்துள்ள நிலையில், இதுக்குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ். அப்போது முதலில் ஐவராக இருந்தார்கள், பிறகு நால்வரனார்கள், இப்போது மீண்டும் ஐவராகி உள்ளார்கள். இன்னும் தேர்தலுக்குள் இவர்கள் இருவராவார்களோ இல்லை தனித் தனியாக நிற்பார்களோ என்று கூட்டணியை அவர் விமர்சித்து உள்ளார்.மேலும், எதிர்க்கட்சித் தலைவராகக் கூட செயலாற்ற முடியாதவர் எப்படி முதல்வராக செயல்படுவார் என்றும் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுக் குறித்துக் கூறியுள்ளார்.

அதோடு 93 வயது கருணாநிதி முதல்வராக வேண்டுமா,63 வயது ஜெயலலிதா முதல்வராக வேண்டுமா இல்லை அன்புமணி என்கிற இளைஞர் முதல்வராக வேண்டுமா என்பதை மக்கள் சிந்திப்பார்கள் என்று அன்புமணி மேலும் கூறியுள்ளார்.

0 Responses to கருணாநிதி- ஜெயலலிதா ஆட்சி வேண்டுமா இல்லை இளைஞர் ஆட்சி வேண்டுமா?: அன்புமணி ராமதாஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com