மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தோடு தாம் பேணி வந்த உறவுகள் தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்களை நிராகரிப்பதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் விவகாரங்களை கமலேஸ் சர்மா கண்டு கொள்வதில்லை என மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வந்தன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை அவர் நிராகரித்துள்ளார்.
அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து அதன் கொள்கைகள் கோட்பாடுகளை மேம்படுத்துவதே பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா, தனது பதவியை விட்டு எதிர்வரும் 30ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றுக் கொள்ளும் நிலையில் இந்தக் கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.

0 Responses to மஹிந்த அரசுடனான நெருக்கம் தொடர்பிலான விமர்சனங்கள்; கமலேஸ் சர்மா நிராகரிப்பு!