இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளின் போது நம்பகத்தன்மை கட்டிக்காக்கப்படுவது அவசியம் என்று ஐக்கிய நாடுகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
நம்பகத்தன்மையான விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பான நெறிமுறைகள் இலங்கைக்குத் தெளிவாக வழங்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகளை அழைப்பதற்கு இணங்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தமை தொடர்பில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் போதே, ஐக்கிய நாடுகளின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "மனித உரிமைகள் பேரவை விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பதை அவர்களே கண்காணிக்க முடியும். இருந்தாலும், நம்பகமான விசாரணை நடத்தப்படுகின்றது என்பதை இலங்கை உறுதிப்படுத்தவேண்டியுள்ளது. நம்பகமான விசாரணைகள் தொடர்பில் தெளிவான வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இது சரியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்த நாம் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்துவோம்.” என்றுள்ளார்.

0 Responses to நம்பகமான விசாரணைகள் அவசியம்; தெளிவான அறிவுறுத்தல்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன: ஐ.நா